

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பே, ‘The Common Man’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாமானிய மக்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்படுவதால், ஒவ்வொரு சுற்றிலும் போட்டி தீவிரமாகி வருகிறது. இந்நிலையில்,5-வது நாள் தேர்வில் இரண்டு பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இருவர் :
பிக் பாஸ் தமிழ் 10 ‘The Common Man’ நிகழ்ச்சியின் 5-வது நாள் தேர்வு தற்போது கவனம் பெற்றுள்ளது. இதில் Baby Prabakaran மற்றும் Ranjith Kumar ஆகிய இருவரும் தங்களது திறமைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நடுவர்களை கவர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இதன் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பை நோக்கி அவர்கள் இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளனர். இருப்பினும், அடுத்த சுற்றிலும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது.
5 பேர் வெளியேற்றம்; 3 பேர் Hold :
இந்த சுற்றில் இரண்டு பேர் மட்டும் முன்னேறவில்லை. மொத்தம் 5 போட்டியாளர்கள் தேர்வு பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் Christian Christofer, Christian Kishore மற்றும் Keshav ஆகிய மூன்று பேர் ‘Hold’ நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படவில்லை என்பதால், அவர்களுக்கான இறுதி முடிவு அடுத்த கட்டத்தில் தெரியவரும். இதனால் இந்த மூன்று பேரின் நிலையும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடந்த தேர்வில் பல மாற்றங்கள் :
The Common Man நிகழ்ச்சியின் முந்தைய சுற்றுகளிலும் போட்டியாளர்களின் நிலை தொடர்ந்து மாறி வருகிறது. முதல் கட்டத்தில் Thadeeshwaran அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், Monica Christina வெளியேற்றப்பட்டார்.அதன் பின்னர் Muniyammal, Shobha Indrakumar மற்றும் Darvin ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். Saranya, Tony J, Samyuktha, Shamshi ஆகியோர் Hold செய்யப்பட்ட நிலையில், Tamil Arasu, Graham Hamilton Paul Edmonds மற்றும் Shiva Saravanan ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
அடுத்த கட்டத்தில் Divya Valenteena முன்னேறிய நிலையில், Parveen Banu, Yo Yo மற்றும் Sri Naga Nithya ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, இறுதியில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் சாமானியர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இடம் கிடைக்குமா?
அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கான இறுதி வெற்றி கிடையாது. இன்னும் தேர்வு நடைமுறைகள் இருப்பதால், முன்னேறிய ஒவ்வொருவரும் தங்களது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இதனால் Baby Prabakaran, Ranjith Kumar உள்ளிட்ட முன்னேறிய போட்டியாளர்களின் அடுத்த கட்ட செயல்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
‘The Common Man’ நிகழ்ச்சி சுமார் 40 சாமானியர்களை மையமாகக் கொண்டு நடைபெறும் தேர்வு நிகழ்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. உடல் திறன், மன வலிமை, உணர்ச்சிகளை கையாளும் விதம், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் போட்டியாளர்களிடம் சோதிக்கப்படுகின்றன.
போட்டியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்?
அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுப வர்களுக்கு இனி போட்டி இன்னும் கடினமாகலாம் .. இதுவரை பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி தங்களை நிரூபித்தவர்கள் அடுத்தடுத்த சவால்களிலும் அதே உறுதியைக் காட்ட வேண்டி இருக்கும்....
குறிப்பாக ஒரே நேரத்தில் பல போட்டியாளர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதால், யார் அதிகமாக கவனம் ஈர்க்கிறார்கள் என்பதும் முக்கியமானது ஆகும்.. தற்போது முன்னேறியுள்ள Baby Prabakaran மற்றும் Ranjith Kumar ஆகியோருக்கு அடுத்த சுற்று முக்கியமான கட்டமாக இருக்கும்..
அதே போல் hold செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கும் மீண்டும் தங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.. ஒவ்வொரு புதிய எபிசோடும் புதிய முடிவுகளை கொண்டு வருவதால் இறுதியில் தேர்வாகப் போகும் சாமானியர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..
ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதுவரை ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்களின் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தடுத்த எபிசோட்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது..முன்னேறியவர்கள் மட்டும் அல்லாமல் hold செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் நிலையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..
இறுதியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பை யார் தட்டிச் செல்கிறார்கள் என்பதை அறிய " The common Man " நிகழ்ச்சியின் அடுத்தடுத்த முற்றுகை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
யாருக்கு சாதகமாக மாறும் இந்த போட்டி??
இந்த தேர்வில் முன்னேறுவதற்கு திறமை மட்டும் அல்லாமல் தனிப்பட்ட அணுகுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது..பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டிய சூழலில் போட்டியாளர்களின் இயல்பான குணம், மற்றவர்களுடன் பழகும் விதம்,எதிர்பாராத சூழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் போன்றவையும் கவனிக்கப்படலாம் ..
இதனால் தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது.. ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதே முக்கியம்.. குறிப்பாக ரசிகர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய போட்டியாளர்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது..
இதனால் அடுத்தடுத்த சுற்றுகளில் யார் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த போகிறார்கள் என்பதும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது..Common Man தேர்வில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் பயணம் எப்படி இருக்கும் என்பதற்கான விடை விரைவில் தெரிய வரும்..
ஒவ்வொரு சுற்றிலும் சிலர் வெளியேற, சிலர் முன்னேறி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் அந்த சாமானியர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.