பிகார் அமைச்சர் திடீர் ராஜிநாமா!

பிகார் அமைச்சர் திடீர் ராஜிநாமா!
Published on

பிகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து சந்தோஷ் குமார் சுமன் என்கிற அமைச்சர் திடீரென பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார். தமது கட்சியை ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்குமாறு நெருக்கடி கொடுத்ததால் ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய கட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கட்சியை பாதுகாக்கவே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தேன் என்கிறார் சந்தோஷ் குமார் சுமன்.

ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (ஹெச்ஏஎம்) கட்சியைச் சேர்ந்த அவரிடம், 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு, எங்கள் கட்சியை ஒரு அரசியல்கட்சியாகவே அவர்கள் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எப்படி அழைப்பார்கள் என்று அவர் கோபத்துடன் கூறினார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் சேரும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அதுபற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. இப்போதைக்கு ஆளும் கட்சி கூட்டணியிலேயே நீடிக்கிறோம் என்று அவர் பதில் கூறினார்.

நாங்கள் ஒரு தனிப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள். எனவே கட்சியை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். பிகாரில் உள்ள மகா கூட்டணியில் நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ள சந்தோஷ் சுமன், பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகன். நிதிஷ் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணியில் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவும் அங்கம் வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com