bill gates dolly chaiwala
bill gates dolly chaiwala

Dolly Chaiwala கடையில் டீ குடித்த பில்கேட்ஸ்.. வைரல் வீடியோ! 

Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரபல தொழிலதிபரான பில்கேட்ஸ், சாலையோரக் கடையில் டீ வாங்கிக் குடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமணக் கொண்டாட்ட நிகழ்ச்சி நாளை குஜராத்தில் தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்தப் பயணத்தில் ஒடிசா முதலமைச்சரை சந்தித்து பேசிய பிறகு, மகாராஷ்டிராவில் உள்ள இணையத்தில் பிரபலமான Dolly Chaiwala-வின் சாலையோர கடையில், அவர் டீ வாங்கிக் குடித்த வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. 

அந்த வீடியோவில் பில்கேட்ஸ், “ஒன் சாய் ப்ளீஸ்” என ஸ்டைலாக்கக் கேட்கிறார். Dolly Chaiwala-வின் வித்தியாசமான டீ தயாரிக்கும் முறையை வியந்தபடியே பார்த்துக்கொண்டு, அவருடன் பேசிக்கொண்டே டீ குடிக்கும் வீடியோ பார்க்கவே நன்றாக இருக்கிறது. இந்த காணொளியை பில்கேட்ஸ் தனது Instagram பக்கத்தில், “இந்தியாவில் நீங்கள் திரும்பும் இடமெல்லாம் புதுமையைக் காணலாம்” என கேப்ஷன் வைத்து, வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இதுவரை இந்த வீடியோவை மில்லியன் கணக்கான நபர்கள் பார்வையிட்டு, 26 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் போட்டுள்ளனர். நாக்பூரில் சாலை ஓரத்தில் டீக்கடை வைத்திருக்கும் டோலி சாய்வாலா, ஏற்கனவே வலைதளத்தில் அவரது வித்தியாசமான டீ தயாரிக்கும் முறைகளால் பிரபலமானவர். இவரது டீ தயாரிப்பு முறையை பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும். இதனாலேயே இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:
Apple Car: கனவு திட்டத்தை கைவிட்ட ஆப்பிள்.. AI காரணமா?
bill gates dolly chaiwala

இப்போது இவரது கடைக்கு பில்கேட்ஸும் வந்திருப்பது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பில்கேட்ஸ் பகிர்ந்த காணொளி, ஒரே நாளில் மில்லியன் கணக்கான பார்வைகளை எட்டி வைரலாகி வருகிறது. 

logo
Kalki Online
kalkionline.com