பறவை காய்ச்சல் எதிரொலி! தமிழக கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால் நாமக்கலில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல்

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைகளில் உள்ள வாத்துக்கள் திடீரென செத்து மடிந்துள்ளன. இதனையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் அவற்றின் ரத்த மாதிரியை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வாத்துக்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று காரணம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தமிழக கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com