#BIG NEWS : காகங்களை தொடர்ந்து இப்போது புறாக்கள்! சென்னையில் மீண்டும் பரவும் பறவைக் காய்ச்சல் பீதி..!
சென்னையில் காகங்களைத் தொடர்ந்து தற்போது முகப்பேர் மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் புறாக்கள் இறந்து கிடப்பது மக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு மாதங்கள் முன் அடையாறு, வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தியாகியது. குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் மட்டும் 130க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்ததாகவும் மிக சமீபத்தில் கடலூர் மாவட்டம் (Cuddalore) கங்கணாங்குப்பம் போன்ற பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்ததும் பதிவாகியுள்ளது.
இதற்கு காரணமாக பறவைக் காய்ச்சல் (Bird Flu) Avian Influenza அல்லது Bird Flu என்ற வைரஸ் என்று கூறப்பட்டதுடன் இறந்த காகங்களின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி காரணம் கண்டறிந்தனர் .ஆய்வுகளில் Avian Influenza (Bird Flu) – குறிப்பாக H5N1 வைரஸ் இருப்பது உறுதியானது. இந்நோய் பரவினால் ஒரே இடத்தில் பல பறவைகள் இறந்து கிடப்பது போன்ற சம்பவங்கள் நடக்கும் என்றும் இந்த காய்ச்சல் மக்களிடம் பரவாது வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மாநகராட்சி மூலம் மேற்கொண்டது.
குறிப்பாக பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு (surveillance) தொடங்கப்பட்டது. இறந்த பறவைகளை பாதுகாப்பாக அகற்றும் பொருட்டு அவற்றை எரித்தல் அல்லது 6–10 அடி ஆழத்தில் புதைத்தல் என்று உத்தரவு பிறப்பித்தது. பறவைகள் இறந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.(disinfection / sanitization ) . மேலும் இறந்த பறவைகளை கையால் தொடக்கூடாது என்றும் உடனே மாநகராட்சி அல்லது கால்நடைத் துறைக்கு தகவல் தர வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரை மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தொடர்கிறது. இந்நிலையில் காகங்களைத் தொடர்ந்து சென்னை முகப்பேர் கிழக்கு (Mugappair East) வீட்டு வாசல் மற்றும் மொட்டை மாடிகளில் புறாக்கள் இறந்து கிடந்தது என்று குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளது மீண்டும் அதிர்ச்சி தந்துள்ளது. மேலும் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், OMR / ECR பகுதிகள் போன்ற இடங்களில் காகங்கள் இறந்ததுடன், சில இடங்களில் புறாக்களும் இறந்து கிடந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பறவை காய்ச்சல் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை என்பதால்தான் புறாக்கள் இறப்புக்கான காரணமா? என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். காரணம் காகங்களில் மட்டும் H5N1 பறவைக் காய்ச்சல் (Bird Flu) உறுதி செய்யப்பட்டுள்ளது. புறாக்களில் அதே நோய் உறுதி செய்யப்படவில்லை; அவை தனித்தனியாக இறந்த சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன என்று விளக்கம் தந்துள்ளனர். புறாக்கள் கூட்டமாக வசிப்பதே அவற்றின் தொற்றுப்பரவலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
Avian Influenza வைரஸ் பொதுவாக காட்டு பறவைகளில் இருந்து மற்ற பறவைகளுக்கு பரவும், ஆனால் மனிதர்களுக்கு பரவுவது மிகவும் அரிது என மருத்துவர்கள் கூறுவது ஆறுதல் தந்தாலும் இறந்த பறவைகளின் அருகே செல்வதையும் கைகளால் தொடுவதையும் தவிர்ப்பதே நமக்கு நல்லது.

