ஜனநாயக கடமையாற்றிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்..!

Tamilisai
Tamilisai source:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பாஜக மூத்த தலைவரும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பின், "வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை" என தெரிவித்தவுடன், தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

தமிழிசை சௌந்தரராஜன் 2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

logo
Kalki Online
kalkionline.com