தெலங்கானாவில் வாக்காளர்களுக்குப் பணம்: காங்கிரஸ், பி.ஆர்.எஸ். மீது பா.ஜ.க. புகார்!

BJP Telangana
BJP Telangana

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, ஹைதராபாத்தில் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடவுள் அருளால்  உத்தராகண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் கண்காணிப்பு, முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் தொடர் மீட்பு முயற்சியே காரணமாகும். தெலங்கானாவில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் தங்கள் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். அங்கு நல்லாட்சி வரவேண்டும். மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி மூலம் வளர்ச்சிப் பணிகள் நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், மது விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதைத் தடுக்க வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் எவ்வித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கானப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில், ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com