திமுக தலைவரை கொண்டாடும் பாஜக நிர்வாகி குஷ்பு !

திமுக தலைவரை கொண்டாடும் பாஜக நிர்வாகி குஷ்பு !

சிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக நிர்வாகி குஷ்பு திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் புகைப்படத்தை பதிவு செய்து அரசியல் ஆசான் என்று குறிப்பிட்டு இருப்பது பாரதிய ஜனதா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் முன்னணி கதாநாயகியாக இருந்த நேரத்தில் நடிகை குஷ்புவிற்காக அவரது ரசிகர் கோயில் கட்டினார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

குஷ்புவிற்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் தீவிர ஆதரவாளராக மாறி தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். பிறகு திமுகவில் முக்கிய எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இந்த நிலையில் குஷ்புவிற்கு திமுகவில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். காங்கிரஸ் கட்சியிலும் அகில இந்திய மகிலா காங்கிரஸின் தலைவர் பொறுப்புகளுக்கு சென்றார். ஆனால் மாநில காங்கிரஸில் முக்கிய ஆளுமையாக செயல்பட முடியாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமானார்.

நடிகை குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு தீவிர அரசியல் மற்றும் நடிப்பு பணி என்று தீவிரமாக செயல்பட்டுவருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியின் முக்கிய தலைவராகவும் தற்போது உயர்ந்திருக்கிறார்.

கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், குஷ்பு சில நேரங்களில் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பகிர தவருவதில்லை. இந்த நிலையில் நடிகை குஷ்பு செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தனது ட்விட்டர் எக்ஸ்த்தலத்தில் "என்னுடைய அரசியல் பள்ளி ஆசான்" என்று திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரிடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவு பாரதிய ஜனதா வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com