திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக அகற்றப்பட்டுள்ளது - முதலமைச்சர்!

திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக அகற்றப்பட்டுள்ளது - முதலமைச்சர்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்துள்ள நிலையில், திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக அகற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடகத்தில் மிகச் சிறிப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துக்கள். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பதவி நீக்கம், நாட்டின் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியது, இந்தி திணிப்பு, ஊழல் ஆகியவை கர்நாடக மக்களின் வாக்குள் மூலம் தற்போது எதிரொலித்திருக்கிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அம்மாநில மக்கள் தங்களின் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி அடுத்து 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலிலும் வெல்ல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம் எனக் கூறியுள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com