பா.ஜ.க, இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி விமர்சித்ததைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும் களத்தில் குதித்திருக்கிறது. பாட்னா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து மகராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவில் பேசியதற்கு பதிலடி தந்திருக்கிறது.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும், சிவசேனாவும் கலந்து கொண்டன. டெல்லியில் இந்துக்கள் வழிபடும் கோயில்கள் பா.ஜ.கவினரால் இடிக்கப்படுவதாகவும், தேர்தல் வரும்போது மட்டும் இந்துக்களின் ஆதரவாளனாக காட்டிக்கொள்ளும் பா.ஜ.கவினர், ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் பாட்னா கூட்டத்தில் பங்கேற்ற உத்தவ் தாக்கரே, பா.ஜ.கவை எதிர்ப்பதற்காக மெகபூபா முப்தியுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டு, இதுவரை பேசி வந்த கொள்கைகளை உத்தவ் தாக்கரேவின் காட்சி கைவிட்டுவிட்டதாக பா.ஜ.கவின் பட்னாவில் கருத்து தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுமென்றே மெகபூபா முப்தி அருகில் அமர்ந்ததாகக் கூறி உத்தவ் தாக்கரே பதிலடி தந்திருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வாரிசுகள் மற்றும் வாரிசு அரசியலை பாதுகாக்கவே ஒன்றாக பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருககிறார்கள். காஷ்மீரில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்ததற்காக பா.ஜ.கவை உத்தவ் தாக்கரே விமர்சித்தார். ஆனால், இப்போது மெகபூபா முப்தி பக்கத்தில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என்று பாட்னாவிஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
பட்னாவிஸ் கருத்துக்கு பதிலடி தந்துள்ள தக்கரே, நான் வேண்டுமென்றே தான் மெகபூபா முப்தி அருகில் சென்று அமர்ந்தேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படாது என்ற நிபந்தனையுடன், பா.ஜ.க கூட்டணி அமைத்தது. பின்னர் நிபந்தனையை மீறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்.
மெகபூபாவுடன் கூட்டணி வைத்தபோதே இந்துத்வாவை விட்டு வெளியேறி விட்டீர்கள். இனியும் இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள். பா.ஜ.கவின் போலி இந்துத்வா முகமூடியை நாங்கள் கிழிப்போம் என்று பதிலடி தந்திருக்கிறார்.
பா.ஜ.கவை எதிர்க்க பாட்னாவில் கூடிய இரண்டு வெவ்வேறு எதிர்க்கட்சிகளும் இந்துத்துவாவை கையிலெடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.