திமுகவிற்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

தமிழ்நாடு பாஜக தலைவர்அண்ணாமலை, திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனவே திமுகவிற்கு எதிராக ஒரு வலிமையான பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்

ஈரோடு கிழக்கு தேர்தலில் இதுவரை தனது நிலைபாட்டை தெரிவிக்காத நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானதையடுத்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் அனைவரும் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பாஜக மட்டும் அதன் நிலைபாட்டை இன்னும் தெரிவிக்காமலேயே இருந்தது.

ADMK
ADMK

இந்நிலையில் காலையில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்தனர். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸை இணைக்க பாஜக முயற்சிப்பதாக அப்போது செய்திகள் வந்தன.

இதையடுத்து பேசிய பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி, 1972 இல் அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய கட்சி தலைவரான எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டார். அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று தான் குற்றம் சாட்டினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரவுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஊழல் பணம் திமுகவினர் ஒரு குடும்ப வளர்ச்சிக்காகவே உழைப்பது. மின்கட்டண உயர்வு, சொத்து பிரிவு உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பால் விலை உயர்வு, திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகவும் திமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக மீது மக்கள் திமுகவிற்கு எதிராகவே உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் அதற்கு ஒன்றிணைந்த அதிமுக அவசியம். திமுகவை எதிர்த்து போட்டியிட ஒரு உறுதியான வேட்பாளர் வேண்டும் அதற்கு அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் இதனை நாங்கள் நேரில் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்விக்கு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 7ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com