NDA என்றால் பாஜக தான்! பாஜக மட்டும் தான், ஒரு நாள் அதிமுகவை பாஜக கைப்பற்றும் – அரவிந்த் கெஜ்ரிவால்..!

BJP one day capture Admk
Arvind kejriwal with stalinAI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஸ்டாலினுடன் இணைந்து சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் , தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர் , அவர் மக்களுக்காக உழைக்கிறார். ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக மட்டுமே போராடவில்லை, அவர் இந்தியாவிற்கும் சேர்த்து போராடிக் கொண்டிருக்கிறார், என்பதை தொகுதி மறு வரையறை விஷயத்தை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். டெல்லியில் நான் செயல்படுத்திய பல நலத்திட்டங்களை தமிழக அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ளது.

இந்த திட்டங்கள் எல்லாம் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தடைபடும். என்டிஏ என்றால் பாஜக கூட்டணி என்பதல்ல, என்டிஏ என்றால் பாஜக மட்டும் தான் , New Delhi Allience அது.

பீகாரில் என்ன நடந்தது? அங்கு பாஜக கூட்டணியை சேர்ந்த ஒருவர் முதல்வரான பின் , அவரை தற்போது ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கிவிட்டு, பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக்கியுள்ளது. இது தான் தமிழ் நாட்டிலும் நடக்கும் அதிமுகவை பாஜக கைப்பற்றும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com