மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு!

மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு!

துரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்தத் திருவிழாவில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்தத் திருவிழா பாதுகாப்பாக நடைபெற வேண்டும் எனும் நோக்கத்தில் வரும் மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம், பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மனு ஒன்றைக் கொடுத்து இருக்கிறார்.

அந்த மனுவில் அவர், ’மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5 முதல் மே 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். போதையில் வரும் நபர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களை சீண்டுவது, நகை பறிப்பது, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், சட்டம் - ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும். எனவே, மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்தாண்டு போல் உயிர்பலி ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.

மனு கொடுக்கச் சென்ற பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன் விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத் தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மகளி ரணி தலைவி மீனா, ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் சரவணன், சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் சென்று இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com