மேற்கு வங்காளத்தில் கலவரத்தில் முடிந்த பாஜக பேரணி

மேற்கு வங்காளத்தில் கலவரத்தில் முடிந்த பாஜக பேரணி


மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சில திரிணாமுல் கட்சி தலைவர்கள் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை செய்து வருகிறது பாஜக.

அதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தாவில் "நபன்னா அபிஜன்" என்கிற ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது.

இதற்காக மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் தொண்டர்கள் வருவதற்காக ஏழு இரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது பாஜக.

இந்த நிலையில் பேரணியின் போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கலவரம் வெடித்திருக்கிறது. இதில் இருதரப்பினருமே காயமடைந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

காவல்துறை வாகனங்கள் சில தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் , தண்ணீரை பீய்ச்சியடித்தும் வருகிறது. மேற்குவங்க காவல்துறை கலவரத்தை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com