தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படாது..! – தொகுதி மறுவரையறை குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்..!

nainar nagendran
nainar nagendransource:dailythanthi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவது, தென் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% அமல்படுத்துவதை விரைவுப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்படுவதாக பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொகுதி மறுவரையறை யாருக்கும் எதிராக பாகுபாடு காட்டாது என்றும், யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மக்களிடையே தேவையற்ற பீதியை உண்டாக்குகின்றன என்றும், இது தென் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நயினார் நாகேந்திரன் தரப்பில் கூறப்பட்டது. அத்துடன் அனைத்து மாநிலங்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தென் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடையும் என்றும் கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com