இந்த முறையும் பாஜக தான்.. அடித்து சொன்ன Fitch Ratings!

Fitch Ratings.
Fitch Ratings.
Published on

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக அணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த Fitch Ratings என்ற நிறுவனம் கணித்துள்ளது. 

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றியடைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜகவும் ஹார்ட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அவர்களின் ராஜதந்திர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 

மறுபுறம், பாஜகவை எதிர்த்து அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றாக இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கினை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம், சர்வதேச அளவில் கடன் மதிப்பீடுகளை வழங்கி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார் என நம்புகிறோம். எங்களுடைய கணிப்பின்படி பிரதமர் மோடிக்கு அதிக அளவில் ஆதரவு உள்ளது. எங்களுடைய கருத்துக்கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என சொல்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா?
Fitch Ratings.

சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தல்களில் 3ல் பாஜக வெற்றி பெற்றுள்ளதால், இந்த கருத்துக்கணிப்பு உண்மையாகலாம் என சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com