ரத்த அழுத்தம் நம் உடலின் ‘Silent Killer’

ரத்த அழுத்தம் நம் உடலின் ‘Silent Killer’
Published on

ன்று நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவத் தகவல்களில் ஒன்று ரத்த அழுத்தம். ‘அது ஏன் இப்ப திடீர்னு தெரிஞ்சுக்கனும்! இதுல என்ன புது தகவல்னு’ நினைக்கிறீங்களா! ஓய்வின்றி ஒடக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில் நாம் அஜாக்கிரதையாக கடந்து செல்லக்கூடிய ரத்த அழுத்தத்தைப் பற்றி அவ்வப்போது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

இன்று மே 17 ‘உலக ரத்த அழுத்த தினமாகும்.

த்த நாளங்கள் வழியாகத்தான் ரத்தம் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது ரத்தம், ரத்தநாளச் சுவர்களில் கொடுக்கப்படும் அழுத்தம்தான் ரத்த அழுத்தம் ஏற்படக் காரணம். இதன் அழுத்தம் அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தமாகவும் (Hyper tension), குறைவாக இருந்தால் குறைந்த ரத்த அழுத்தமாகவும் (Hypo tension) மாறுகிறது.

உலகளவில் இதய நோய் மற்றும் பக்கவாதம் தொடர்பான உயிரிழப்பிற்கு ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருப்பதாக உலக இதய அறக்கட்டளை கூறுகிறது. மேலும், ‘உலக சுகாதார அமைப்பின் (WHO) கனிப்பின்படி, உலகில், 30 முதல் 79 வயதிற்குட்பட்ட 1.28 பில்லியன் நபர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் (மூன்றில் இரண்டு பங்கு) குறைந்த மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்த அழுத்தம் இன்று பொதுவான உடல் உபாதையாக மாறிடுச்சு. இதற்கான அறிகுறிகள் அவ்வளவு சீக்கிரம் நாம் உணரப்படுவதில்லை. அதனால்தான் ரத்த அழுத்தத்தை ‘அமைதியான கொலையாளி’ (Silent killer) என்றும் அழைக்கலாம். ரத்த அழுத்தத்தை சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். கடுமையான தலைவலி, நெஞ்சு வலி, தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை (அ) பார்வையில் பிற மாற்றங்கள், கவலை, குழப்பம், காதுகளில் சத்தம், மூக்கில் ரத்தக் கசிவு, அசாதாரண இதய துடிப்பு. இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை அவசியம்.

‘என்னப்பா ரொம்ப பயம் காட்டுறீங்க.

என் உடம்பு ஆரோக்கியமா இருக்கணும், அதுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை முறையை அமைச்சுக்கணும்னு” கேக்குறீங்களா.

அப்போ இப்படி பண்ணுங்க. முடிந்தவரை இயற்கையான பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்க, நல்ல தூக்கம் முக்கியம். உடலுக்கு உழைப்பு ரொம்ப முக்கியம். (உடற்பயிற்சி, கடுமையான வேலை எதுவானாலும்). உடல் எடையைக் கொஞ்சம் அளவோடு வச்சுக்கலாம். கொழுப்பு நிறைந்த உணவை ஆசைக்கு அளவோடு சாப்பிடலாம். அதிக கஃபைன் (Caffeine) உடலுக்கு வேண்டாம். பதப்படுத்தப்பட்ட உணவு (Procesed or Junk food)  மிக மிக முக்கியமா வேண்டவே வேண்டாம். மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை உங்கள் உடல்நலன் கருதி குறைத்துகொள்ளுங்கள்.

எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் ‘ஆல் இஸ் வெல்’னு இதயத்தை ஏமாத்தி வைங்க... ஏன்னா நாம நல்லா இருந்தாதானே குடும்பம் நல்லா இருக்கும்.

‘உங்க நல்லதுக்குச் சொன்னேன்.’

மேலும் ஒரு செய்தியோட முடிச்சுக்குறேன். இந்திய அரசு 2025ற்குள் ரத்த அழுத்த நோயாளிகளில் 25 சதவிகிதம் குறைப்பதை  இலக்காக வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 220 மில்லியன் நபர்களில் உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சை சேவையை விரைவாக அணுகுவதற்காக இந்திய அரசு, இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முயற்சியை (Indian Hypertension Control Initiative) செயல்படுத்தி வருகிறது.

‘ஆல் இஸ் வெல்.’

தகவல்: எஸ். சரோஜா, நிர்வாக இயக்குனர் (Citizen Consumer And Civil Action Group) சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com