இந்தோனேசியாவில் படகு எரிந்து விபத்து! 17 பேர் பலி!

படகு எரிந்து  விபத்து
படகு எரிந்து விபத்து
Updated on

இந்தோனேசியாவில் படகு எரிந்து விபத்துக்குள்ளானதில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் தீவுக்கூட்டம் அதிகம் என்பதால் அங்கு மக்கள் படகுசவாரி மேற்கொள்வது வழக்கம் . இந்த பகுதியில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது.

தெற்கு இந்தோனேசியாவில் இருந்து நுசா தெங்கரா பகுதியில் இருந்து 240 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று கலாபாஹி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்தவர்கள் நீரில் குதித்து தப்பிக்க முயன்றனர்.

உடனடியாக அந்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த மீட்பு கப்பல் உட்பட கப்பல்களில் இருந்த மீட்புக்குழுவினர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 223 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 17 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com