
கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடலோர காவல்படையானது 'M/V Horizon Arctic (ஒரு நங்கூரம் கையாளும் கப்பல்) நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸுக்கு வந்த போது டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள கடல் தளத்திலிருந்து கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் ஆதாரங்களை மீட்டெடுத்தது' என தெரிவித்துள்ள்ளது.
பேரழிவு ஏற்பட்டதற்கான காரணங்களை புரிந்து கொள்ளவும், இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் சான்றுகள் உதவும். இதற்கிடையில், டைட்டன் நீழ் மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை வைத்திருக்கும் நிறுவனமான பெலாஜிக் ரிசர்ச் சர்வீஸ், தற்போதைக்கு கடல் வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக தெரிவித்தார்.
செயின்ட் ஜான்ஸில் உள்ள கனடா கடலோர காவல்படை வார்ஃபில் ஹொரைசன் ஆர்க்டிக்கால் எடுக்கப்பட்ட இடிபாடுகளில் ஒரு வெள்ளை பேனல் போன்ற ஒரு துண்டு மற்றும் வெள்ளை தார்பாலின் சுற்றப்பட்ட கயிறுகள் மற்றும் கம்பிகள் கொண்ட அதே அளவிலான மற்றொரு துண்டு இருந்தது. ஆனால் அது என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.
ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன் மூலம் இயக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மற்றும் அதன் ஐந்து பயணிகளும் ஜூன் 18ஆம் தேதி காலை 111 ஆண்டுகள் பழமையான டைட்டானிக் கப்பல் இடிபாடுகளை பார்க்க புறப்பட்டது. டைட்டானிக் கப்பலை பார்க்க ஐந்து பேருடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 18 அன்று காணாமல் போனது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
டைட்டானிக் அருகே தேடுதல் வேட்டையாடியவர்கள் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் (ROV) டைட்டானிக்கிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் கடல் தளத்தில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தது. அந்த சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.