சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என, மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய மர்ம நபர் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை பூக்கடை, பெரிய மேடு போலீஸார் ரயில்வே போலீஸாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் அதிகம் மக்கள் கூடும் முக்கிய பகுதியாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

மிரட்டலை அடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மிரட்டல் பொய்யானது என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பெரியமேடு போலீசார் நடத்திய விசாரணையில் தொலைபேசி அழைப்பு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த 21 வயதான மணிகண்டன் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com