பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்.. அச்சத்தில் பெற்றோர்கள்!

Bomb Threat
Bomb Threat
Published on

சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்னை போரூருக்கு அடுத்து உள்ள மாங்காடு செரும்பாக்கத்தில் பி.எஸ்.பி.பி என்றப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம் போல் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இப்பள்ளிக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனே போலீஸாருக்கு இதனைப் பற்றித் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்துப் போலீஸார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் அந்தப் பள்ளிக்கு விரைந்து பள்ளியில் சோதனைச் செய்து வருகின்றனர். ஒருப்பக்கம் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். மறுப்பக்கம் போலீஸார் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்து வருகின்றனர். காலை சீக்கிரமாகப் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்துப் பள்ளி வறாண்டாக்கள், பள்ளி பஸ்கள், பள்ளி வளாகம் போன்ற இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று நள்ளிரவில் மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் தகவல் வந்ததைத் தொடர்ந்து, இரவே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நள்ளிரவு முதலே அப்பள்ளியில் போலீஸார் சோதனைச் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
3 மணிக்கு மேல், 3 ஊழியர்களுக்கு, 30 டாலர்கள் கொடுக்கும் நிறுவனம்.. ஏன்?
Bomb Threat

ஏற்கனவே இரண்டு நாட்கள் முன்னதாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகளுக்கு வந்தது. அப்போதும் போலீஸார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர். ஆனால் எதுவும் கிடைக்காததால் அது புரளி என்றுத் தெரியவந்தது. ஆனால் இன்னும் போலீஸார் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்று கண்டுப்பிடிக்கவில்லை. இந்தநிலையில், இரண்டாவது முறையாக இந்த மிரட்டல் வந்துள்ளதால் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com