லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ

லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ

த்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞர் திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்காக லண்டனுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு ஹோட்டல் அறையில் நினைவிழுந்த நிலையில் இருந்த அவரை அறையின் கதவைத் திறந்து  உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். அவருக்கு அங்கு தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. நமது மத்திய அரசாங்கம் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைகொண்டு தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க உதவி இருக்கிறது.

அவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் விரைவில் குணமடைய கலை ரசிகர்கள் அனைவரும் அவருக்காகப் பிரார்த்திப்போம்.

கர்நாடக சங்கீத கலைஞர்கள்  உயரிய விருதாகப் போற்றும் சென்னை சங்கீத வித்வத் சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான 'சங்கீத கலாநிதி' விருதுக்காக ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே  இப்படி ஒரு செய்தி கிடைக்கப்பெற்று கலை ரசிகர்கள் அனைவரையும்,  குறிப்பாக, கர்நாடக சங்கீத ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலை குலைய செய்திருக்கிறது.

திருமதி பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் குணமடைந்து மீண்டும் அவருடைய இனிமையான சங்கீதத்தால் நம் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று கல்கி குழுமம் ரசிகர்களுடன் இணைந்து பிரார்த்திக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com