முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பொம்மன் - பெல்லி தம்பதி!

முதல்வரை  தலைமைச் செயலகத்தில் சந்தித்த பொம்மன் - பெல்லி தம்பதி!
Published on

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆஸ்கர் விருது வென்ற ஆவண படத்தில் நடித்த தம்பதி சந்திப்பு இன்று நடை பெற்றது.இருவரும் முதல்வரைச் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர்

சென்னை, தலைமைச் செயலகத்தில் பொம்மன் - பெல்லி தம்பதி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்தில் தயாரிப்பாளர் குனீத்மோங்கா, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் அகாடெமி மேடையில் விருதை பெற்றுகொண்டனர்.

இதன் காரணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பொம்மன், பெள்ளி ஆகிய இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். முதல்வர் இருவருக்கும் சால்வை அணிந்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவர்களுக்கு பரிசு பணமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது .

95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில் அதில் விருது பெற்றவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய கதை இது. இதை குனீத் மோங்கா என்பவர் தயாரிக்க கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் வாங்கிய பிறகு படத்தை பலரும் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com