சென்னை புத்தக கண்காட்சி விரைவில் .....!

book fair
book fair
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. வரப்போகிற 2023 ஆம் ஆண்டுக்கான புத்தக காட்சியை கடந்த ஜனவரி 6-ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சியாக சென்னை புத்தக காட்சி கருதப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

book fair
book fair

புத்தக காட்சியில் நாள்தோறும் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் . வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

வார நாட்களில் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறறும் . விடுமுறை தினங்களில்

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும் . புத்தக கண்காட்சியில் மாணவ மாணவியருக்கு முற்றிலும் இலவசம். மற்றவர்களுக்கு RS. 10/- நுழைவு கட்டணம் உண்டு.

புத்தக கண்காட்சியினை திறந்து வைக்க முதல்வன் முக ஸ்டாலின் அவர்களால் தேதி உறுதி செய்யப்பட்டு திறப்பு விழா தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

logo
Kalki Online
kalkionline.com