பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு!

southern railway
southern railway

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நேற்று முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே நிர்வாகம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.எனவே, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர், நேற்று முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப, ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

reservation counter
reservation counter

ரயில்வேயில், 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் , முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும்.

ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com