மீனால் பறிபோன உயிர்.. நண்பர் கொடுத்த கிஃப்டால் விபரீதம்!

puffer fish
puffer fish

பிரேசிலில் நண்பர் பரிசாக கொடுத்த பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிரிகளிடமிருந்து தன்னை காத்து கொள்வதற்காக உடலை பலமடங்கு பெரிதாக்கி கொள்ளும் விஷ தன்மை கொண்டது தான் பஃபர் மீன். அதிக விஷத்தனைமை உடைய மீன் என்பதால் இதனை யாரும் உணவாக எடுத்துகொள்வதில்லை. இதனையும் மீறி சிலர் அதை எடுத்து கொண்டாலும் விஷத்தை சுத்தம் செய்து அதில் உள்ள சில நல்ல உறுப்புகளை மட்டும் உண்பார்கள்.

பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டா(Espirito Santa) பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய நண்பன் மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் என்பவருக்கு பஃபர்ஃபிஷ்(puffer fish) அல்லது கோளமீன் என அழைக்கப்படும் மீனை பரிசளித்துள்ளார். அத்துடன் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அதை சமைத்து லெமன் ஜூஸ் உடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர்.

puffer fish death
puffer fish death

இதையடுத்து சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாயில் உணர்ச்சி இல்லாமல் போய் உள்ளது, இதனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மேக்னோ செர்ஜியோ கோம்ஸ்(Magno Sergio Gomes) நண்பருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த மீனை சாப்பிட்ட நண்பருக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நண்பர் கொடுத்த பரிசால் ஒருவருக்கு உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com