பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சரண் சிங் 2024  தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சரண் சிங் 2024 தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு!

பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது தற்போதைய தொகுதியான கைசர்கஞ்சில் போட்டியிடப் போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

பிரஜ் சிங், கைசர்கஞ்சில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் நேற்று உரையாற்றினார், அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அதன் அடிப்படையில் நடந்துகொண்டிருக்கும் தொடர் போராட்டங்கள் குறித்தும் நேரடியாகக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ஆனாலும் தன்னை குற்றமற்றவராகக் காட்டிக் கொள்ளும் முனைப்பை கை விடவில்லை. தன் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், அவர் ஒரு உருது கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கினார், அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது, கண்ணீரும், வலியும், விஷமும் நிறைந்த என் காதலுக்கு நான் பெற்ற வெகுமதியே இந்த ‘ஏமாற்றுக்காரன்’, ‘துரோகி’ எனும் பட்டங்கள். இதை எனது பெயருக்கு கிடைத்த புகழ் அல்லது இகழாக எண்ணி அவர்கள் ரகசியமாக விவாதிக்கிறார்கள். என்று அர்த்தம் தொனிக்கும் உருதுக் கவிதையுடன் பிரிஜ் பூஷன் பேசத் தொடங்கினார்.

நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை சிங் பட்டியலிட்டார். அயோத்தி உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பை தாமதப்படுத்த முந்தைய எதிர்க்கட்சி தலைமையிலான அரசுகள் சதி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதில் நிஜமான சுவாரஸ்யம் என்னவெனில், தற்போதுள்ள சூழலில் பிரிஜ் பூஷன் சிங் மீதுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அவரை களமிறக்க பாஜக அதிக ஆர்வம் காட்டாத நிலையில், சிங் யாருடைய சீட்டில் போட்டியிடுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதனால் அவர் தேர்தலுக்காகத் தான் களமிறங்க விரும்பும் கட்சியின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார்.

6 முறைகளாக மக்களவை உறுப்பினராக உள்ள சிங், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இருப்பினும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது மல்யுத்த வீரர்களை ஆதரிப்பதால், பிரிஜ்பூஷன் சிங்குக்கு அக்கட்சி சார்பில் 2024ல் டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல கெத்து

விடாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது ஆச்சர்யமே!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com