மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யவேண்டும்: பாபா ராம்தேவ்

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யவேண்டும்: பாபா ராம்தேவ்

இந்திய மல்யுத்தவீர்ர்கள் கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் வைக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ராம் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மல்யுத்தவீர்ர்கள் கூட்டமைப்பின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள் போராடி வரும் நிலையில், மத்திய அரசு அதை கண்டுகொள்ளாத்து வெட்கக்கேடானது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ராம்தேவ் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் பிரிஜ்பூஷன், தாய்மார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளை அவமதித்து வருகிறார். அவரது செயல் கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார். ,

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் மூன்றுநாள் யோகா நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராம்தேவ், பிரிஜ்பூஷனுக்கு எதிராக தில்லி போலீஸார் முதல்

தகவல் அறிக்கை பதிவு செய்தபோதிலும் அவரை ஏன் கைது செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறீர்கள். அவரை நான் கைது செய்து சிறைக்கு அனுப்பமுடியாது. என்னால் கருத்துக்களை மட்டுமே கூறமுடியும் என்றார்.

என்னால் அனைத்து கேள்விகளுக்கும் அரசியல் ரீதியில் பதில் சொல்ல முடியும். பதில் சொல்ல முடியாத அளவுக்கு நான் அறிவில்லாதவன் அல்ல. நான் புத்திசாலிதான். ஆனால், சில சமயங்களில் நான் கூறும் கருத்துகள் திரித்து சொல்லப்படுகின்றன. அது பிரச்னையை ஏற்படுத்துகிறது என்றார்.

பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீர்ர்களான வினீஷ் போகட், ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரிஜ்பூஷன் மீது தில்லி போலீஸார் இரண்டு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்துள்ளனர். பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தியது தொடர்பாக ஒரு எப்.ஐ.ஆர். மற்றும் மைனர் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக மற்றொரு எப்.ஐ.ஆர். (போக்சோ சட்டத்தின்) என இரு எப்..ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

துறவிகளின் ஆதரவுடன் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று சிங் பதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com