ரிலையன்ஸ் மூலமாக பிரிட்டானிய காபி ஷாப் Pret A இந்தியா வருகிறது!

ரிலையன்ஸ் மூலமாக பிரிட்டானிய காபி ஷாப் Pret A இந்தியா வருகிறது!

RIL இன் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், டாடா குழுமத்தால் இயக்கப்படும் ஸ்டார்பக்ஸ் மற்றும் புதிய நுழைவான கனடாவின் காபி செயின் டிம் ஹார்டன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பிரிட்டிஷ் சாண்ட்விச் மற்றும் காபி சங்கிலியான ‘ப்ரீட் எ மேங்கர்’ என்ற முதல் கடையை வெள்ளிக்கிழமை இந்தியாவில் தொடங்க உள்ளது.

மேக்கர் மேக்சிட்டி மூலமாக, மும்பையில் கன்னி முயற்சியாக முதல் ஸ்டோர் தொடங்கப்படுகிறது மற்றும் ரிலையன்ஸின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படும் பல கடைகளில் இதுவே முதல் கடையாகும். பெரிய நிறுவனங்களைத் தவிர, ப்ளூ டோக்காய் மற்றும் தேர்டு வே காபி போன்ற நிறுவனங்களும் இந்தியாவின் பெரிய நகரங்களில் வேகமாக விரிவடைந்துள்ளன, ஏனெனில் டீ ப்ரியர்கள் தான் வெகு அதிகமெனக் கருதப்படும் இந்த தேசத்தில் அதே விகிதத்தில் அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்தியர்கள் இந்தக் கடைகளில் விற்கப்படும் காபிக்காக வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர். இத்தகைய காபி ஷாப்களில் தற்போது, நிலையான வரவேற்பைப் பெற்று முதலிடத்தில் இருப்பது டாடாவின் ஸ்டார்பக்ஸ்.

ஸ்டார்பக்ஸ் தற்போது இந்தியாவின் பெருநகரப்பகுதிகளில் 30 நகரங்களில் 275 கடைகளைக் கொண்டுள்ளது.

1986 இல் லண்டனில் தொடங்கப்பட்ட Pret A Manger, இப்போது நாடு முழுவதும் சுமார் 550 கடைகளை நடத்துகிறது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, 2022-2023 நிதியாண்டின் (FY23) நான்காவது காலாண்டில் 13% நிகர லாபம் அதிகரித்து ரூ.4,716 கோடியாக உயர்ந்துள்ளது என்று நிறுவனம் ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.4,173 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. மார்ச் 2022 காலாண்டில் ரூ.20,945 கோடியிலிருந்து ரூ.23,394 கோடியாக அறிக்கையிடப்பட்ட காலாண்டில் செயல்பாடுகளின் வருவாய் சுமார் 12% அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com