இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!
Published on

பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமரான டொமினிக் ராப் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டொமினிக் ராப் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் சில முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டொமினிக் ராப் தற்போது பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமராகவும், நீதித்துறை செயலாளராகவும் உள்ளார். இவர் முன்பு பிரிட்டன் நாட்டின் வெளியுறவுச் செயலாளராகவும், பிரெக்சிட் செயலாளராகவும் பணிபுரிந்தபோது, ​​ஊழியர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதும், Bully செய்ததும் இந்த துஷ்பிரயோகம் செய்ததாக பிரதமர் ரிஷி சுனக்-கிற்கு வந்த எட்டு முறை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் வந்த அடுத்த நாளே பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமரான டொமினிக் ராப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக கடந்த நவம்பர் மாதத்தில் தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையின் அறிக்கை, பிரதமர் ரிஷி சுனக்கிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்து தகவல் வெளியாவதற்கு முன்பாகவே துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எழுதியுள்ள கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி விசாரணைக்கு அழைப்பு விடுத்ததாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என தாம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தனது வார்த்தையை காப்பாற்றும் வகையில் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com