இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா!

பிரதமர் லிஸ் டிரஸ்
பிரதமர் லிஸ் டிரஸ்
Published on

இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்று 45 நாட்களே ஆன நிலையில் தற்போது அவர் திடீர் ராஜினாமா செய்தது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் லிஸ் ராஜினாமா செய்ததாக சொலப் படுகிறது. அவர் சமீபத்தில் சமர்ப்பித்த மினி பட்ஜெட்டுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அடுத்தடுத்து அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்தனர். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்தின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இப்போது பெரும் குழப்பம் நிலவுகிற்து. லிஸ்ஸின் ராஜினாமவை அடுத்து அப்பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், மற்றும் முன்னாள் பிரதமரான  போரிஸ் ஜான்சன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

அதே நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முறை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அடுத்தடுத்து பதவி விலகும் பிரதமர்கள், கட்சியில் ஒற்றுமை இல்லாதது, பொருளாதார நெருக்கடி, பணமதிப்பு வீழ்ச்சி போன்றவை பாராளமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பலையை எழுப்பியுள்ளது. இந்நிலையில் உடனடியாக அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அறிவித்துள்ளது.

லிஸ் டிரஸ் கொண்டுவந்த வரி குறைப்பு கொள்கை, அவர் எதிர்பார்த்ததை அளிக்காமல், ஏற்கனவே சரிவாக இருந்த பொருளாதாரத்தை மேலும் சரிய வைத்துள்ளது. லிஸ் டிரஸ்யின் கொள்கைகளைக் கட்சியில் உள்ளவர்களே எதிர்த்து வரும் நிலையில் எதிர்க் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டனில் உடனடி பொதுத் தேர்தல் நடத்தக் கோரியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com