சென்னையில் பிராய்லர் கோழி கறி விலை உயர்வு!

சென்னையில் பிராய்லர் கோழி கறி விலை உயர்வு!
Updated on

சென்னையில் பிராய்லர் கோழியின் விலை மே மாதத்தில் 220 ஆக இருந்த நிலையில் தற்போது 300 கிலோவாக உயர்ந்துள்ளது.

பறவைகளின் எடை அதிகரிக்காததாலும், மீன்பிடி தடைகாலம் காரணமாக அசைவ உணவுப் பிரியர்களுக்கு மாற்று உணவுத் தேவை அதிகமாக இருப்பதாலும், சிக்கன் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னையில் ஆட்டிறைச்சி கிலோ, 840 முதல், 900 வரை விற்பனையாகிறது.

வருடாந்திர மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டிருப்பதால் தற்போது மீன்வரத்து குறைந்து , தரமான மீன்கள் கிடைக்கவில்லை. அதனால், சிக்கன் மலிவாக இருக்கிறது என்று நினைத்து அதை வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால், அதன் விலையும் இப்போது 300 ஆக உயர்ந்து விட்டதே!," என சென்னை மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இறைச்சி கடை உரிமையாளர்கள் கூறுகையில், ""பிப்ரவரி, மார்ச் மாதங்களில், கோழிக்கறி மொத்த விலையானது கிலோவுக்கு, ரூ 80 ஆக குறைந்ததால், எங்களால் குறைந்த விலையிலும் லாபம் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது மொத்த விற்பனை விலை உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைச் சந்திக்காமல் இருக்க சில்லறை விற்பனையில் விலையை உயர்த்தி உள்ளோம். - என்கிறார்கள்.

கோடைக்காலத்தில் கோழிகள் முட்டையிடுவதற்கு விவசாயிகள் இந்த காலத்தை பயன்படுத்துவதால் ஓரிரு வாரங்களுக்கு சிக்கன் வரத்து இருக்காது, எனவே, இந்த சமயங்களில் கோழியின் மொத்த விலை பொதுவாக அதிகரித்து வருவதாக கோழி வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இதே சமயத்தில் மொத்த விற்பனையில் கோழிக்கறி ஒரு கிலோவுக்கு ரூ.165 வரை தொட்டது, ஆனால் இந்த ஆண்டு ரூ.170-ஆக அதிகரித்துள்ளது என்கிறார்கள் கோழி வியாபாரிகள்.

வியாபாரிகளின் பொதுவான விளக்கம் என்னவென்றால், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்ததால், பறவைகள் எடையை சேகரிக்கும் வேகம் குறைந்துள்ளது. வெப்பநிலை குறையும் போது இரவில் மட்டுமே அவை தீவனம் எடுக்கின்றன. அதனால், அவற்றின் உணவு உட்கொள்ளல் குறைந்துள்ளது. பொதுவாக எடை அதிகரிக்க 40 நாட்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய பறவைகள், விற்பனைக்குத் தேவையான உரிய எடையை அதிகரிக்க இப்போது 50 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன," என்பதே!

கடந்த ஆண்டு தேவை குறைந்ததால் கோழிக்கறியின் சில்லறை விலை அதிகரிக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு அனைத்து சுற்றுலா இடங்களும் பரபரப்பாக மாறியதோடு, தரமான மீன்கள் இல்லாததால் கோழியின் தேவை அதிகமாக உள்ளதோடு தொடர்ந்து ஒரே சீராகவும் இருப்பதால் தேவைக்கேற்ப விலை ரூ.260 ஆக உயர்திருக்கிறது.

வெப்பம் குறைந்து மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால், அடுத்த இரண்டு வாரங்களில் விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com