நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் இன்று( பிப்ரவரி 1-ம்தேதி) ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தனது உரையைத் தொடங்கினார். அவர் உரையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.
அதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது. அரசின் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பலனடைகின்றனர்.
சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
வளர்ந்த பாரதம் என்ற நிலையை எட்ட மத்திய அரசு தொடர்ந்து பாடுகிறது.
தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.
இந்தியாவில் ஜி.டி.பி. 7 சதவீதம் எனும் உயர்ந்த நிலையில் உள்ளது.
12 வருட மோடி ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்டில் வெளியான முக்கிய அம்சங்கள் :
ரூ. 10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் கொண்டுவரப்படும்.
உயிரி மருத்துவதுறைக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
உயிரி மருத்துவதுறைக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை முன்மொழிந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஓடிசாவில் அரியவகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்.
மருந்துகள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ.10000 கோடி ஒதுக்கீடு.
சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டியிட புதிய திட்டங்கள்.
கன்டெய்னர்கள் உற்பத்திக்கு ரூ.10000 கோடி முதலீடு செய்யப்படும்.
சிறு,குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் பொதுப்போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும்.
* 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மூலதனச்செலவு ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்வு.
* வாரணாசி, பாட்னாவில் கப்பல் பழுது பார்க்கும் தளங்கள் அமைக்கப்படும்.
* சென்னை- பெங்களூரு, ஹைதராபாத் இரு மார்க்கத்தில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்
* மூலதன செலவுக்கு ரூ12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* எரிபொருள் போன்ற முக்கிய துறைகளை ஊக்குவிக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.
* நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை தொடங்கப்படும்.
* 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களின் மேம்பாட்டிற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு.
* வங்கித் துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
* பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிகேஷன், கார்பரேஷன் நிறுவனங்கள் புத்தாக்கம் செய்யப்படும்.
* நாள்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.
* 10 சதவீதம் உள்ள முதலீட்டு வரம்பு 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது.
* வரும் ஆண்டுகளில் 1.5 லட்சம் சுகாதாரப் பணியாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த தனியார் துறைகளோடு இணைந்து நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
* நாட்டின் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நிறுவப்படும்.
* மருத்துவ சிகிச்சைகளுடன், நோய் கண்டறிதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.
* நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவிபுரிய 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
* மருத்துவ சுற்றுலாவை மேம்படுதத நாடுமுழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
* ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுதத ஒருங்கிணைந்த திட்டங்கள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் மையம் அமைக்கப்படும்.
* ஆதிச்சநல்லூரில் உள்பட 15 இடங்களில் உள்ள தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.
* ஆயுஸ் மருந்தகங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
* பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* புலிகட் ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* 2026-27 ஆம் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு
* நாடு முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு மூலதன மானியம் வழங்கப்படும்.
* 500 நீர்நிலைகளில் மீன்பிடி தொழில், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* கார்பன் உமிழ்வை குறைக்க 4 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு.
* மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்.
* முந்திரி உற்பத்தியை மேம்படுத்த பிரத்யேக இயக்கம் முன்னெடுக்கப்படும்.
* சந்தன மரங்கள் சாகுபடிக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படும்.
* வெளிவாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிப்பு
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.
* நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் மாநிலங்களுக்கு படி ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு
* மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்.
* முந்திரி உற்பத்தியை மேம்படுத்த பிரத்யேக இயக்கம் முன்னெடுக்கப்படும்.
* சந்தன மரங்கள் சாகுபடிக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படும்.
* வெளிவாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிப்பு
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.
* நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் மாநிலங்களுக்கு படி ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு
* பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
* விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றின் விவரங்களை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் ஏ.ஐ. செயலி.
* மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை. 41 சதவீத அளவிலேயே தொடரும்.
* வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
* விபத்து காப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு.
வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம்.
* வெளிநாட்டு பயண திட்டங்களுக்கான டிசிஎஸ் வரி 20 சதவீதத்தில் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.4
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
* தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம்.
* வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு
* சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.
* திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கலுக்கு மார்ச் 31 வரை அவகாரம்
* வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம்.
* மருத்துவ கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
* புதிய வருமான வரிச் சட்டத்தில் ஈவுத்தொகைக்கான வரியில் இருந்து விலக்கு
* கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களுக்கு 2047 வரை வரி கிடையாது.
* தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை
* லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி கிடையாது.
* காலணி ஏற்றுமதியாளர்களுக்கான மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு வரி இல்லை.
* 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
* 2035 ஆம் ஆண்டு வரை அணுமின் திட்டங்களுக்கான பொருட்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகை.
* மைக்ரோவேவ் ஓவன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது.