BUDGET 2026-27 : சென்னை- பெங்களூரு, ஹைதராபாத் இரு மார்க்கத்தில் அதிவேக ரயில் பாதை..!

Nirmala Sitharaman presented the budget for the 9th time
Nirmala Sitharaman presented the budget for the 9th time
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை ஜன. 29ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி, வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் இந்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த முறை 3 நாட்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 8 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து இந்திய வரலாற்றிலேயே இதுவரை அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சிறப்பை பெற்றிருந்த நிர்மலா சீதாராமன், தற்போது 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சரும் இவர் தான்.

இந்நிலையில் சற்று முன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

10000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம்

அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்திட திட்டம்

மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.40000 கோடி நிதி ஒதுக்கீடு

புதிய மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

செமி கண்டக்டர் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படும்

நுண் சிறு குறு தொழிலை ஊக்குவிக்க மும்முனை திட்டம்

காதி கைவினை பொருட்களுக்கு ஊக்கம் தரும் வகையில் மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் திட்டம்.

சிறு குறு உற்பத்தி நிறுவன பொருட்களை பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும்

மூலதன செலவு ஒதுக்கீது 12.2 லட்சம் கோடியாக உயர்வு

நாட்டின் கிழக்கு மேற்கு பகுதிகளை இளைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை

நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் பொதுப்போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும்.

* 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மூலதனச்செலவு ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்வு.

* வாரணாசி, பாட்னாவில் கப்பல் பழுது பார்க்கும் தளங்கள் அமைக்கப்படும்.

* சென்னை- பெங்களூரு, ஹைதராபாத் இரு மார்க்கத்தில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்

* மூலதன செலவுக்கு ரூ12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* எரிபொருள் போன்ற முக்கிய துறைகளை ஊக்குவிக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை தொடங்கப்படும்.

* 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களின் மேம்பாட்டிற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு.

* வங்கித் துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

* பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிகேஷன், கார்பரேஷன் நிறுவனங்கள் புத்தாக்கம் செய்யப்படும்.

* நாள்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.

* 10 சதவீதம் உள்ள முதலீட்டு வரம்பு 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com