ரயில்வே டிக்கெட்டை பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் ஐஆர்சிடிசி அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் ‘பொருள் இப்போது வாங்குங்கள்.. பணம் பிறகு செலுத்தலாம்’ (Buy Now.. Pay Later) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அதாவது ஆன்லைன் மூலம் முதலில் பொருட்களை வாங்கிக்கொண்டு, பின்னர் ஒரு மாதம் கழித்து பணத்தை கட்டி கொள்ளலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதே முறையை தற்போது IRCTC-ரயில் டிக்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது இந்திய ரயில்வேத்துறை ‘கேஷ்-இ’ என்ற நிறுவனத்துடன் இணைந்து 'Travel Now Pay Later' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அதற்கான பணத்தை கேஷ்-இ நிறுவனம் செலுத்தி விடும்.
அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு, பயணிகளிடம் இருந்து தவணை முறையிலோ மொத்தமாகவோ டிக்கெட் தொகையை வசூல் செய்து கொள்ளும். இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.