#BREAKING: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு...

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்கள்
அதிமுக வேட்பாளர்கள்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 6-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.

திமுக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இன்று காலை தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார். அதேபோல் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, இம்முறை தவெக சார்பில் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் (அதிமுக வேட்பாளர்கள்) மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி போட்டியிட உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com