தொப்பை போலீசுக்கு BYE...BYE... - அசாம் டிஜிபி அதிரடி!

தொப்பை போலீசுக்கு BYE...BYE... - அசாம் டிஜிபி அதிரடி!
Published on

“அசாம் மாநிலத்தில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் குறிப்பிட்ட உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். இன்னும் மூன்று மாதத்திற்குள் அவர்கள் தங்கள் உடல்தகுதியை நிரூபிக்காவிட்டால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்” என்று மாநில டிஜிபி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில டி.ஜி.பி. ஜி.பி. சிங் வெளியிட்டுள்ள செய்தியில், “அசாம் போலீஸார் அனைவருக்கும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்படும். ஐ.பி.எஸ். மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்ட அனைத்து போலீஸாரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் தங்கள் உடல் தகுதியை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 15 நாளில் அவர்களின் உடல் தகுதி கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.

குண்டாக இருக்கும் போலீஸார் உடனடியாக தங்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மூன்று மாதத்திற்கு பிறகும் அவர்கள் உடல் தகுதிக்கான எடையைவிட அதிக எடையில் இருந்தால் அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும். எனினும் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் போலீஸாரின் உடல் தகுதி கணக்கெடுக்கப்படும். முதல் ஆளாக நான் இதில் பங்கேற்பேன் என்றும் சிங் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் 70,000 போலீஸார் பணிபுரிந்து வருகிறார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்கள், அதிகம் சாப்பிட்டு உடலை குண்டாக வைத்திருப்பவர்கள், உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையுடன் இருப்பவர்கள் பட்டியல் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளது. இதில் 680 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் உடலை சீராக வைத்திருக்காவிட்டால் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்ப்ப்படுவார்கள்.

ஏற்கெனவே தொப்பையுடன் இருக்கும் 680 பேர் பட்டியல் உள்ளது. எனினும் அடிப்படையில்லாமல் யாரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட அளவில் குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். மாவட்ட அளவில் கூடுதல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி இதை கவனிப்பார்.

தொப்பையுடன் உள்ள போலீஸார் பட்டியல் வெளியிடப்படும். விருப்ப ஓய்வில் செல்ல முடியாதவர்களுக்கு களப்பணி கொடுக்கப்படமாட்டாது என்றும் டிஜிபி சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் போலீஸாருடன் மெய்நிகர் சந்திப்பில் உரையாடிய முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, உருட்டு கட்டைபோல் குண்டாக இருக்கும் போலீஸார், தொப்பையுடன் இருக்கும் போலீஸார், குடிப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக

சாப்பிட்டுவிட்டு குண்டாக இருப்பவர்கள், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com