அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட இருந்த நிலையில் நெஞ்சுவலியால் கதறி அழுதார் அமைச்சர் செந்தில் பாலாஜி. மருத்துவர்களை அழைத்து வர சொன்னார்.
அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவ மனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வந்து சேர்ந்தனர்.