கடுமையாக சரிந்த முட்டைகோஸ் விலை! விவசாயிகள் கடும் வேதனை!

கடுமையாக சரிந்த முட்டைகோஸ் விலை! விவசாயிகள் கடும் வேதனை!

முட்டைக்கோஸ் அதிக விளைச்சல் கண்டுள்ள நிலையில் கடுமையாக சரிந்த முட்டைகோஸ் விலையால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைத்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான முட்டைக்கோஸ், தற்போது 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர்.

ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சந்தையில் முட்டைக்கோஸ் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நட்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், சிறுவாச்சூர், தம்மம்பட்டி, அய்யங்கரடு மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள கருமந்துறை, வெங்காயக்குறிச்சி, கரியகோவில், பகடுப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று.முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.

தற்போது பருவ மழை பெய்து வந்த நிலையில் முட்டைக்கோஸ் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்தது. குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய முட்டைக்கோஸ் குளிர் மற்றும் சமவெளி பகுதிகளில் விளையும் என்பதால் விவசாயிகளின் எளிய பயிராக முட்டைக்கோஸ் உள்ளது.

தற்போது அதிக அளவில் விவசாயிகளால் முட்டைகோஸ் விளைவித்து அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூட்டை, மூட்டையாக காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரகத்திற்கு ஏற்ப முட்டைக்கோஸ் விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

முட்டைக்கோஸ் சாகுபடி குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக விளங்குகிறது. சமவெளி பகுதிகளில் இது குளிர்கால பயிராக சாகுபடி செய்யப்படும் இந்த பயிருக்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளர கூடிய பயிராகும்.சமவெளிப்பகுதியில் நவம்பர் டிசம்பர் ஜனவரி போன்ற மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com