முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  மே மாதம் 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் !
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு பயணம் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக கொண்டு வந்த தனித்தீர்மானம், ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த 12 மணி நேர வேலை திருத்த சட்டம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை மே 2-ந்தேதி கூடுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு பயணம் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

அதேபோல, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு தொடர்பாக பள்ளி பாடநூலில் பாடம் இடம்பெறுவது, பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை மாநில முழுவதும் விரிவுபடுத்துவது, எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்துவது, முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

அதோடு, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com