பசுவதை தடை சட்டம் குறித்து அமைச்சரவை விவாதிக்கும்: சித்தராமையா!

பசுவதை தடை சட்டம் குறித்து அமைச்சரவை விவாதிக்கும்: சித்தராமையா!

பசுவதை தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கர்நாடக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு ஆட்சேபம் எழுந்துள்ள நிலையில் அந்த சட்டம் குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

முந்தைய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள பசுவதை தடைச் சட்டம் தெளிவாக இல்லை. எனவே தற்போதுள்ள காங்கிரஸ் அரசு அது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பசுவதை தடை சட்டம் குறித்து எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. அமைச்சரவையில் விவாதித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.வெங்கடேஷ், “எருமை மாடுகளை வதைக்கும்போது பசுமாடுகளை ஏன் வதைக்க்க்கூடாது என்று கேட்டிருந்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து.

முந்தைய பா.ஜ.க. அரசு பசுவதை தடை சட்டத்தை கொண்டுவந்தது. அதில் எருமைகளை வதை செய்வதற்கு (கொல்வதற்கு) அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் பசுவதை கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது குறித்து விவாதித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

வயதான பசுமாடுகளை வைத்து பராமரிப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளன. எனவே வயதான பசுக்களை

கொல்வதன் மூலம் பிரச்னையை சமாளிக்க முடியும் என்று அமைச்சர் வெங்கடேஷ் கூறியிருந்தார்.

பசுவதை தடை சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அமைச்சரின் கருத்துக்கு பலத்த ஆட்சேபங்கள் எழுந்தன. இதை முன்வைத்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாகவும் பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைகூட அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தியர்கள் பசுவை தெய்வமாக வணங்கி வருகின்றனர். எனவே இந்த யோசனையை கைவிடுமாறு அமைச்சருக்கு அறிவுரை கூறுங்கள் என்று முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார்.

பசுவதை தடை சட்டத்தை ரத்துச் செய்ய சரியான காரணங்கள் ஏதும் இல்லை. ஹிந்துக்களை புண்படுத்தும் செயலில் காங்கிரஸ் இறங்கக்கூடாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. அஸ்வத் நாராயணன் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com