சிறைக் காவலர்
சிறைக் காவலர்

சிறைக் காவலர் சீருடையில் கேமரா: புது திட்டம் அறிமுகம்!

தமிழக சிறைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் நேற்று புழல் மத்திய சிறையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழக சிறைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

இருப்பினும் சிறை வளாகம் முழுவதையும் இவற்றால் கண்காணிக்க முடியாததால், சிறைக் காவலா்களின் சீருடையில் கன்காணிப்பு கேமரா பொருத்த தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி நடவடிக்கை எடுத்தாா்.

இதற்காக 50 கேமராக்களுக்கும், அதற்கான சா்வா் நிறுவுவதற்கும், அரசு ரூ.46 லட்சம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து நேற்று முதற்கட்டமாக புழல் மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக் காவலா்கள் 5 பேருக்கு சீருடையில் அணிந்து கொள்ள 5 கேமராக்கள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சீருடையில் கேமரா பொருத்தப்பட்ட இந்த 5 காவலா்கள், இப்போது சிறையின் உயா் பாதுகாப்புப் பிரிவில் மட்டும் பணி அமா்த்தப்படுகிறாா்கள்.

இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் நேரலையும் காண முடியும்.

இந்த திட்டம் விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் அறிமுகப் படுத்தப்படும். இப்போது அடுத்த கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட சிறையில்  அமல்படுத்தப் படவுள்ளது எனத் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com