வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் இந்தியா குறித்து முறையிடவுள்ள கனடா!

canada Vs India
canada Vs India
Published on

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், நாளை வெளிநாட்டு தலையீடு ஆணையத்தில் கனடா இதுகுறித்து முறையிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில்  இந்த இயக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் தொடர்ச்சியாக காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

இப்படியான நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதியாக இருந்த நிஜ்ஜார் இந்தியாவில் இருந்தபோது அவர் நாட்டின் ஒற்றுமைக்கு கலங்கம் விளைவிப்பதாக சொல்லி புலனாய்வு குழு மூலம் அவரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிருந்து கனடாவிற்கு சென்று அங்கு குடியுரிமையும் வாங்கிக்கொண்டார்.

இதனையடுத்து அவர் கொலைசெய்யப்பட்டார். இது கனடாவின் மொத்த போலீஸ் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. இதனால், அந்த அரசு இதனை மிகவும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அந்த விசாரணையில் இந்த கொலைக்கும், இந்திய தூதரகத்திற்கும் சம்பந்தம் உள்ளதாக கனடா அரசு தெரிவித்தது. இதனை முற்றிலும் இந்திய அரசு மறுத்துவிட்டது. இதனால், கனடாவில் இருந்த இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிவிட்டது. இதையே இந்தியாவும் பதிலுக்கு செய்தது.

இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னரே இரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீண்டும் திரும்பினர்.

ஒருவழியாக பிரச்னை முடிந்தது என்று இருந்த நேரத்தில், தற்போது மீண்டும் இது வெடித்திருக்கிறது. கனடா பிரதமர் ட்ரூடோ நாடாளுமன்றத்தில், நிஜ்ஜார் எங்கள் நாட்டு குடிமகன், அவரை இந்தியா கொன்றுவிட்டது.

இந்தியாதான் குற்றவாளி என்று கூறியதும் இந்தியாவின் சுயமரியாதை கேள்விக்குறியானது. இந்தியா பலமுறை கேட்டும் இந்த வழக்கு குறித்த எந்தவொரு சிறிய ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது இந்தியா மீதான கனடா பிரதமர் ட்ரூடோவின் விரோதம் வெளிப்படையாக தெரிகிறது. ட்ரூடோ அரசு இந்திய கனடா உறவினைப் பிரிக்கவே இவ்வாறு செய்கிறது என்று பலர் விமர்சித்தனர்.

இதையும் படியுங்கள்:
News 5 – (15.10.2024) டாக்ஸிசைக்லின்(Doxycyline) மாத்திரைகள் வழங்க முடிவு!
canada Vs India

இந்தநிலையில்தான் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் (Foreign Interference Commission) இந்தியா மீதான குற்றச்சாட்டை எழுப்ப கனடா திட்டமிட்டிருக்கிறது. நாளை ட்ரூடோ இந்த ஆணையம் முன்பு ஆஜராகிறார். இதன்மூலம் இந்தியாவிடம் தொடர்ந்து பல கேள்விகளை முன்வைக்கப்போகிறார் கனடா பிரதமர். இவரின் இந்த செயலால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com