ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் ரத்து : 2,000 கோடி ரூபாய் லாபம்!

 ரயில்வே
ரயில்வே
Published on

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே துறைக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.

2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவிட் தொற்றுநோய் தொடங்கிய பிறகு மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேசிய டிரான்ஸ்போர்ட்டர் ரூ 1,500 கோடி அதிகமாக ஈட்டியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்ததன் மூலம் ரயில்வே துறை சுமார் 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு என்று கட்டண சலுகைகள் இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடும் ரயில்களில் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரயில் சேவை சீரடைந்துள்ள போதும் நிறுத்தப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை நிறுத்தப்பட்டதால் மட்டும், 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே பதில் அளித்துள்ளது. ரயில்வேயில் வருவாய் அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.

ரயில்வே துறையில் பல்வேறு வகையான பயணிகளுக்கு சுமார் 53 வகையான சலுகைகளை வழங்குகிறது. இதன் காரணமாக ரயில்வே துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதிதுமை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதில் மொத்த சலுகை தொகையில் 80 சதவிகிதம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com