UGC NET
UGC NET

9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

Published on

கடந்த ஜூன் 18 அன்று நடந்த UGC NET தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதால், தேர்வு ரத்து செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

தேசிய தேர்வு முகமை மேல் தொடர்ந்து குற்றசாட்டு எழுந்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. பின் அது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அந்த நிலையில், தற்போது நெட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய தேர்வு முகமை, நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் UCG NET தகுதி தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கணினி வழி தேர்வாக நடத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
“ஆயிரம் ஜென்னல் வீடு” – ஒரே கட்டிடத்தில் வசிக்கும் ஒரு முழு நகரம்!
UGC NET

அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாத தேர்வு கடந்த 18 ஆம் தேதி 317 நகரங்களில் 1205 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 35 ஆயிரத்து 587 பெண்களும், 4 லட்சத்து 85 ஆயிரத்து 579 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 59 பேர் என மொத்தம் 11 லட்சத்து 21 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்தனர். அதில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் மட்டுமே இந்த தேர்வை எழுதினர்.

இந்த நிலையில், இன்று இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என தேசிய சைபர் குற்ற பிரிவு கல்வி அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுத்த மத்திய கல்வி அமைச்சகம், இந்த தேர்வு ரத்து செய்யப்படும் எனவும் மறுதேர்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com