நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட 86 அரசியல் கட்சிகள் உட்பட மொத்தம் 253 கட்சிகள் செயல்படாதவை என்று அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;
இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 29A-ன் கீழ், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் பெயர், தலைமை அலுவலகம், அலுவலகப் பணியாளர்கள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தாமதமின்றி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
அந்த வகையில் பீகாா், தில்லி, கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 253 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகின்றன.
-இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.