ஆன்லைன் சூதாட்டம் மீதான தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது - உயர் நீதி மன்றம்!

ஆன்லைன் சூதாட்டம் மீதான தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது - உயர் நீதி மன்றம்!
Published on

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியவர் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று மனு மீதான வாதங்கள் நடைபெற்றன.

ஆன்லைன் ரம்மி நிறுவனம் ஒன்றின் சார்பாக ஆஜாரான அபிஷேக் மனு சிங்வி, " ஆன்லைன் தடை சட்ட மசோதா அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று வாதிட்டார். திறமையை அடிப்படை அம்சமாக கொண்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும், சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் மதுபான விற்பனைகள் மீது எந்த தடையும் விதிக்க வில்லை என்றும் வாதிட்டார். திறன் சார்ந்த ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் சமூக சீரழிவுகள் குறித்த விரிவான அறிக்கையை , தரவுகளோ அரசிடம் இல்லை என்று தெரிவித்த அவர், ஆன்லைன் ரம்மி தொழில்நுட்பம் உண்மைக்கு புறம்பானமை என்று நிரூபிக்க எந்தவித கூறுகளும் இல்லை என்றும் வாதிட்டார்.

high court
high court

அப்போது, பேசிய பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, " மதுரைக்கு அருகே உள்ள தனது தென்னூர் கிராமத்தில் சிகரெட், மது மீதான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நினைவூட்டினார். மதுரை காந்தி அருங்காட்சியகம் தனது கிராமத்தை மாதிரி கிராமமாக தேர்வு செய்துள்ளதையும் தெரிவித்தார்.

இதற்கு, பதிலளித்த நீதிபதிகள், "திறன் சார்ந்த விளையாட்டுகள் என்று கருதப்பட்ட குதிரை பந்தயமும், லாட்டரியும் படிப்படியாக தடை செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினர். சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவது ஆகியவற்றை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினர். ஒழுங்குமுறைகள் மூலம் நெறிப்படுத்த முடியும் என்பதை அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

அனைத்து வாதங்கையும் கேட்டறிந்த நீதிபதிகள், " எதிர்வரும் ஜூன் 2வது வாரத்துக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனு அளிக்க உத்தரவிட்டனர். தமிழ்நாடு அரசின் பதில் மனுவை பெறாமல் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com