

முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிரான வழக்கில் இன்று மாலை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கின்றது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் எனும் வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சரின் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து வருவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஏப்ரல் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி வழக்கு ஏப்ரல் 17ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான தனது புகாரை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான விவகாரங்களில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது’ என்று கூறி எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று வாதம் முன் வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள் கூடுதல் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கிற்கு இன்று மாலை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கின்றது.