

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயனை கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர் போலீசார்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு இன்று நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இனி யாரையும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் தினசரி காலை மற்றும் மாலை என 2 வேளையும் அடுத்த 2 வாரங்களுக்கு தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நடக்கும் தினங்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
திமுக சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதன் காரணமாக கடந்த ஜூலை 20-ம் தேதி கைது செய்யப்பட்டார் மார்க்கண்டேயன்.
ஏற்கனவே ஒருமுறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்ஓ இம்முறை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் எம்எல்ஏ பேசியது தவறு தான் என அவர் தரப்பு வக்கீல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
நாளை மறுதினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், எம்எல்ஏ இனி இவ்வாறு பேசக்கூடாது என நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தியுள்ளார்