யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

வடமாநில தொழிலாளர்கள் போலி வீடியோ விவகாரம்!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறையின் மணிஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது முதல் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்து காவல்துறை விசாரணை செய்வதற்காக மணிஷ் காய்ஷப்பை கடந்த 30ம் தேதி மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் மனிஷ் காஷ்யப்பை ஆஜர்படுத்திய நிலையில் 3நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

Arrest
Arrest

இதனையடுத்து இந்த வழக்கு நேற்று தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் மனீஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com